Loading [MathJax]/extensions/AssistiveMML.js

நீட் - இயற்பியல் - பொருட்களின் காந்தப் பண்புகள்

Buy நீட் தமிழ் - 2024 (Crash Course) Practice test pack

Question - 1

இரு காந்த முனைகளுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசை அல்லது விலக்கு விசையை  எவ்விதியிலிருந்து பெறலாம்?

  • A கூலும் எதிர்த்தகவு இருமடி விதி
  • B டேஞ்ஜன்ட் விதி
  • C லென்ஸ் விதி
  • D ஸ்நெல் விதி

Question - 2

காந்தவியலின் அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவியவர்________.

  • A கில்பர்ட்
  • B காஸ்
  • C ஆம்பியர்
  • D கூலும்

Question - 3

காந்தப் பாய அடர்த்திக்கும் (B) காந்தப்புலச் செறிவுக்கும் (H) உள்ள விகிதம்________.

  • A காந்த ஏற்புத்திறன்
  • B காந்த உட்புகு திறன்
  • C காந்தமாக்கச் செறிவு
  • D இவற்றில் எதுவுமில்லை

Question - 4

ஒரு காந்தத்தின் காந்தத் திருப்புத்திறன் 5 Am2 ஆகும். காந்த முனை வலிமை 25 Am எனில், காந்தத்தின் நீளம்________.

  • A 10 cm
  • B 20 cm
  • C 25 cm
  • D 1.25 cm

Question - 5

காந்தங்களின் ஓரின துருவங்கள்________.

  • A ஒன்றையொன்று எதிர்க்கின்றன
  • B ஒன்றையொன்று கவர்கின்றன
  • C எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை
  • D சில சமயங்களில் கவரும், சில சமயங்களில் எதிர்க்கும்

Question - 6

ஊடகத்தின் ஒப்புமை உட்புகு திறனுக்கான அலகு________.

  • A ஹென்றி/மீ 
  • B வெபர்/மீ2
  • C அலகு இல்லை
  • D வெயர் மீ2

Question - 7

மின்காந்தங்களின் தேனிரும்பு கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஏனெனில் தேனிரும்பு ஆனது _________ கொண்டுள்ளது

  • A குறைந்த காந்த ஏற்புத் திறனையும், குறைவான மீதக்காந்தத் தூண்டலையும்
  • B அதிகமான காந்த ஏற்புத் திறனையும், குறைவான மீதக் காந்தத் தூண்டலையும்
  • C அதிகமான காந்த ஏற்புத் திறனையும் அதிகமான மீதக் காந்தத் தூண்டலையும்
  • D குறைவான காந்த ஏற்புத் திறனையும் அதிகமான மீதக் காந்தத் தூண்டலையும்

Question - 8

கியூரி புள்ளிக்கு மிகுந்த வெப்ப நிலையில்________.

  • A ஃபெரோ காந்தம் பாரா காந்தமாகிறது
  • B பாரா காந்தம் ஃபெரோ காந்தமாகிறது
  • C பாரா காந்தம் டயா காந்தமாகிறது
  • D ஃபெரோ காந்தம் டயா காந்தமாகிறது

Question - 9

புவியின் காந்தப் பண்பிற்கான காரணம்________.

  • A சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள்
  • B புவியில் உள்ள மின்னோட்டங்கள்
  • C நிலவின் செயல்பாடு
  • D இவை அனைத்தும்

Question - 10

காந்த முனையில் விளையும் காந்தப்புலச் செறிவின் அலகு

  • A ஆம்பியர் சுற்று
  • B ஆம்பியர் சுற்று-மீ2
  • C ஆம்பியர்- மீ2
  • D ஆம்பியர்/மீட்டர்