நீட் - வேதியியல் - கரைசல்கள்

Buy நீட் தமிழ் - 2024 (Pro Pack) Practice test pack

Question - 1

கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரி? 

  • A ஒரு கரைசலின் மோலாரிட்டி வெப்பநிலையைப் பொறுத்தது அல்ல 
  • B ஒரு கரைசலின் மோலாலிட்டி வெப்பநிலையைப் பொறுத்தது அல்ல 
  • C மோலாரிட்டியின் அலகு mol-1 L-1.  
  • D மோலாலிட்டியின் அலகு mol L-1.  

Question - 2

250 ml, 0.25 M  கரைசலில் உள்ள நீரற்ற Na2CO3 யின் அளவு______.

  • A 6.0 g 
  • B 6.625 g
  • C 66.25 g
  • D 6.225 g

Question - 3

250 ml கரைசலில் 5g NaOH இருப்பின் கரைசலின் மோலாரிட்டி யாது? 

  • A 0.1
  • B 0.3
  • C 0.5
  • D 0.7

Question - 4

ஒரு கரைசலில், ஒரு கரைபொருள் துணுக்கு அளவில் இருப்பின், அதன் செறிவு இவ்வாறு கொடுக்கப்படுகிறது: 

  • A ppm 
  • B மில்லி கிராம் சதவீதம் 
  • C ஒரு மில்லியனில் கிராம் 
  • D மைக்கா கிராம் சதவீதம் 

Question - 5

MB மோலார் நிறையுடைய, WBg கரைபொருளானது WAg  கரைப்பானில் கரையும் எனில், கரைசலின் மோலாரிட்டியானது ______.

  • A \(\frac{W_{B}}{M_{B}}\times \frac{1000}{W_{A}}\)
  • B \(\frac{W_{A}}{M_{B}}\times \frac{1000}{W_{B}}\)
  • C \(\frac{W_{B}}{W_{A}}\times \frac{M_{B}} {1000}\)
  • D \(\frac{W_{A}}{W_{B}}\times \frac{M_{B}} {1000}\)

Question - 6

வெப்பநிலை அதிகரிக்கும் போது இவற்றில், எது மாறுகிறது?  

  • A மோலாலிட்டி 
  • B கரைபொருள் எடை பின்னம் 
  • C மோலாரிட்டி 
  • D மோல் பின்னம் 

Question - 7

மோலார் பின்னத்தின் அலகு ______.

  • A mol/L  
  • B mol/L2  
  • C mol.L  
  • D அலகு இல்லை 

Question - 8

கீழ்க்கண்ட கூற்றுகளில் எது ரவோல்ட் விதியைக் குறிப்பிடப்படுகிறது 

  • A ஆவி அழுத்தக்குறைவு கரைபொருளின் மோல் பின்னத்திற்கு சமம் 
  • B ஒப்பு ஆவி அழுத்தக் குறைவு கரைபொருளின் மோல் பின்னத்திற்கு சமம் 
  • C ஒப்பு ஆவி அழுத்தக் குறைவு கரைப்பானின் மோல் பின்னத்திற்கு சமம்  
  • D கரைசலின் ஆவி அழுத்தம், கரைப்பானின் மோல் பின்னத்திற்கு சமம்  

Question - 9

ரவோல்ட் விதியிலிருந்து நேர்குறிவிலகலை காண்பிக்கும் இணைக்கு ஓர் எடுத்துக்காட்டு ______.

  • A அசிட்டோன் - குளோரோபார்ம் 
  • B நீர் - HCl  
  • C எத்தனால் - அசிட்டோன் 
  • D குளோரோபார்ம் - பென்சீன் 

Question - 10

இரு நீர்மங்களின் அசிட்யோட்ரோபிக் கரைசலின் கொதிநிலை இரு கூறுகளின் கொதிநிலையை விட எப்போது குறைவு?   

  • A ரவோல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலகலடையும் போது 
  • B ரவோல்ட் விதியிலிருந்து நேர்குறி விலகலடையும் போது 
  • C ரவோல்ட் விதியிலிருந்து விலகாத போது 
  • D ரவோல்ட் விதிக்கு உட்படும் போது