11th Standard - தமிழ் - பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பகுபத உறுப்புகளுள்‌ இடம்‌ பெறும்‌ அடிப்படை உறுப்புகள்‌ எவை?

  • A பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்‌.
  • B பகுதி, இடைநிலை, சாரியை. 
  • C பகுதி, சந்தி, விகாரம்‌
  • D பகுதி, விகுதி.

Question - 2

கண்ணன்‌ என்பது _________ பகுபதம்‌ ஆகும்‌

  • A பொருட்பெயர்
  • B பண்புப்பெயர்
  • C சினைப்பெயர்‌
  • D பண்புத்தொகை

Question - 3

இடைச்சொற்கள் _________ பதம் ஆகும்

  • A பகு
  • B பகா
  • C விளி
  • D விகுதி

Question - 4

மதுரையான்‌ ________ பெயர்ப்பகுபதம்‌ ஆகும்‌.

  • A பொருள்‌ 
  • B சினை 
  • C இடப்‌
  • D பண்பு

Question - 5

பகுபதத்தில்‌ குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள் ________

  • A பகுதி, சந்தி
  • B இடைநிலை, சாரியை
  • C பகுதி, விகுதி
  • D சந்தி, விகாரம்

Question - 6

ஏவல்‌ வினையாய்‌ அமைவது _______ ஆகும்‌.

  • A பெயர்ப்பகுபதம்
  • B வினைப்பகுபதம்
  • C எதுவுமில்லை
  • D இடைநிலைபகுபதம்

Question - 7

'இல்‌' என்னும்‌ எதிர்மறை இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல்‌ __________

  • A கேளான்
  • B வாரான் 
  • C கண்டிலன்‌
  • D கொடுங்கள்

Question - 8

செய்தான்‌ - இச்சொல்லில்‌ அமைந்துள்ள இடைநிலை _________

  • A இன்
  • B த்‌ 
  • C ட்‌
  • D ந்

Question - 9

எழுதினான்‌ - இச்சொல்லில்‌ அமைந்துள்ள இடைநிலை ________ ஆகும்‌

  • A த்‌
  • B இன்
  • C ட்
  • D ச்

Question - 10

 கொண்ட - இச்சொல்லின்‌ பகுதி ________

  • A கொண்‌ 
  • B கொள்‌ 
  • C கொ
  • D கொண்டு