11th Standard - தமிழ் - கேடில் விழுச்செல்வம் - இலக்கணம் - படைப்பாக்க உத்திகள்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

ஒட்டுப்‌ போடாத
ஆகாயம்‌ போல - இந்த
உலகமும்‌ ஒன்றேதான்‌.
- இக்கவிதையில்‌ பயின்று வருவது

  • A உவமை
  • B உருவகம்‌
  • C உள்ளுறை
  • D இறைச்சி

Question - 2

கீழ்க்காண்பனவற்றுள்‌ 'இறைச்சி' பற்றிய கூற்றைத்‌ தேர்க.

  • A குறியீடுகளைக்‌ கொண்டு உருவாக்கப்படும்‌
  • B ஒப்பிட்டுச்‌ செறிவும்‌ பொருள்‌ அழுத்தமும்‌ சிறக்க அமையும்
  • C வினை, பயன்‌, வடிவம்‌, நிறம்‌ ஆகிய நான்கன்‌ அடிப்படையில்‌ தோன்றும்‌
  • D உரிப்பொருளோடு நேரிடைத்‌ தொடர்பில்லாத குறிப்புப்பொருள்‌

Question - 3

'நிழல்‌ போலத்‌ தொடர்ந்தான்‌' - இது எவ்வகை உவமை,

  • A வினை
  • B பயன்‌ 
  • C வடிவம்‌ 
  • D மெய்‌ 

Question - 4

'புலி போலப்‌ பாய்ந்தான்‌' - இத்தொடரில்‌ அமைந்துள்ள உவம உருபு ____________

  • A பாய்‌ 
  • B பாய்ந்தான்‌ 
  • C புலி 
  • D போல

Question - 5

உவமையின்‌ செறிவார்ந்த வடிவமே ___________

  • A இறைச்சி 
  • B உருவகம்‌ 
  • C குறியீடு 
  • D உள்ளுறை

Question - 6

அகப்பாடலில்‌ மட்டுமே வருவது _________

  • A உவமை 
  • B உருவகம்‌ 
  • C இறைச்சி 
  • D குறியீடு

Question - 7

“புலிபோலப்‌ பாய்ந்தான்‌” என்பது, ________ அடிப்படையில்‌ தோன்றிய உவமை.

  • A நிறம்‌ 
  • B வடிவம்‌ 
  • C பயன்‌ 
  • D தொழில்‌

Question - 8

'மழைபோலக்‌ கொடுக்கும்‌ கை' என்பது, _______ அடிப்படையில்‌ தோன்றிய உவமை.

  • A உரு 
  • B மெய்‌ 
  • C பயன்‌ 
  • D வினை

Question - 9

'துடிபோலும்‌ இடை' என்பது, _______ அடிப்படையில்‌ தோன்றிய உவமை.

  • A வினை 
  • B பயன்‌ 
  • C நிற 
  • D வடிவ (மெய்‌)

Question - 10

“தளிர்போலும்‌ மேனி” என்பது, __________ அடிப்படையில்‌ தோன்றிய உவமை.

  • A தொழில்‌ 
  • B பயன்‌ 
  • C வடிவ 
  • D நிற (௨௫௬)