11th Standard - தமிழ் - வையத் தலைமை கொள் - செய்யுள் - புரட்சிக்கவி

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன் - யார் யாரிடம் கூறியது?

  • A அமைச்சர் கவிஞரிடம்
  • B மன்னர் அமைச்சரிடம்
  • C அமைச்சர் மன்னரிடம்
  • D மன்னர் அமுதவல்லியிடம்

Question - 2

மக்களாட்சிக்கு முன்புவரை சட்டம், நிருவாகம், நீதி ஆகியவை குவிந்திருந்தன. யாரிடத்தில்?

  • A அமைச்சர்
  • B அரசர்
  • C படைத்தளபதி
  • D அரசியல் ஆலோசகர்

Question - 3

மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள்_____

  • A அரசு, படை, நிருவாகம்
  • B சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்
  • C சட்டம், நீதி, தண்டனை
  • D உணவு, உடை, இருப்பிடம்

Question - 4

அரசு என்பது________என்று கவிஞர்கள் இலக்கிய வடிவங்களின்மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

  • A அரசனுக்கானது
  • B அமைச்சர்களுக்கானது
  • C மக்களுக்கானது
  • D பகைவர்களுக்கானது

Question - 5

உதாரன் _____என்றும் அமுதவல்லி _______என்றும் பொய்யுரைக்குமாறு அமைச்சர் கூறினார்.

  • A தொழுநோயாளி, பார்வையற்றவள்
  • B பார்வையற்றவன், தொழுநோயாளி
  • C காது கேளாதவன், மனநிலை சரியில்லாதவள்
  • D மனநிலை சரியில்லாதவன். காது கேளாதவள்

Question - 6

புரட்சிக்கவி என்னும் காவியத்தை இயற்றியவர்________.

  • A பாரதியார்
  • B பாரதிதாசன்
  • C மறைமலையடிகள்
  • D அண்ணாமலையார்

Question - 7

பாரதிதாசனின் இயற்பெயர்_______

  • A கனகசுப்புரத்தினம்
  • B சுப்பிரமணியன்
  • C பாலகிருஷ்ணன்
  • D வரதராசன்

Question - 8

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பாரதிதாசனின் நூல்_______

  • A சேரதாண்டவம்
  • B புரட்சிக்கவி
  • C பிசிராந்தையார்
  • D அழகின் சிரிப்பு

Question - 9

பாரதிதாசன் நடத்திய இதழ்______

  • A நிலா
  • B தென்றல்
  • C மயில்
  • D குயில்

Question - 10

வடமொழியிலுள்ள______காவியத்தைத் தழுவித் தமிழில் புரட்சிக்கவி என்னும் நூலைப் பாரதிதாசன் இயற்றினார்.

  • A மகாபாரதம்
  • B இராமாயணம்
  • C பில்கணியம்
  • D காவியதர்சம்