11th Standard - தமிழ் - பீடு பெற நில் - வாழ்வியல் - திருக்குறள்

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

படத்துக்குப்‌ பொருத்தமான திருக்குறளைக்‌ கண்டுபிடிக்க.

  • A வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்‌ செய்தவம்‌ ஈண்டு முயலப்‌படும்‌.
  • B அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
  • C நிலையின்‌ திரியாது அடங்கியான்‌ தோற்றம்‌ மலையினும்‌ மாணப்‌ பெரிது,
  • D வேண்டிய எய்தலால்‌ செய்தவம்‌ ஈண்டு முயலப்‌படும்‌

Question - 2

துன்பப்படுவர் _____________

  • A தீக்காயம்‌ பட்டவர்‌
  • B தீயினால்‌ சுட்டவர்‌ 
  • C பொருளைக்‌ காக்காதவர்‌
  • D நாவைக்‌ காக்காதவர்‌

Question - 3

பின்வரும்‌ நாலடியார்‌ பாடலின்‌ பொருளுக்குப்‌ பொருத்தமான திருக்குறளைக்‌ கண்டறிக.
மலைமிசைத்‌ தோன்றும்‌ மதியம்போல்‌ யானைத்‌
தலைமிசைக்‌ கொண்ட குடையர்‌ - நிலமிசைத்‌
துஞ்சினார்‌ என்றெடுத்துத்‌ தூற்றப்பட்‌ டாரல்லாள்‌
எஞ்சினார்‌ இவ்வுலகத் தில்,

  • A ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்‌.
  • B நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ்‌ வுலகு.
  • C அளவறிந்து வாழாதான்‌ வாழ்க்கை உளபோல இல்லாகித்‌ தோன்றாக்‌ கெடும்‌.
  • D அளவறிந்து வாழ்க்கை உளபோல இல்லாகித்‌ தோன்றாக்‌ கெடும்‌.

Question - 4

கீழ்க்காணும்‌ புதுக்கவிதைக்குப்‌ பொருந்தும்‌ திருக்குறளைத்‌ தேர்ந்தெடுக்க.
பூக்களுக்கும்‌ முள்களுக்கும்‌ இடையில்‌
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும்‌ நியாயத்துக்கும்‌ நடுவில்‌
நசுங்குகிறது அறம்‌
இன்பத்துக்கும்‌ பேராசைக்கும்‌ நடக்கும்‌
போராட்டத்தில்‌ வெடிக்கின்றன 
வெளியில்‌ குண்டுகளும்‌
வீட்டில் சண்டைகளும்...
ஆசை அறுத்தல்‌ எளிதல்ல!
முயன்று பார்க்கலாம்‌ வா!

  • A அருவினை யென்ப உளவோ கருவியான்‌ காலம்‌ அறிந்து செயின்‌.
  • B பீலிபெய்‌ சாகாடும்‌ அச்சிறும்‌ அப்பண்டம்‌ சால மிகுத்துப்‌ பெயின்‌.
  • C இன்பம்‌ இடையறாது ஈண்டும்‌ அவாவென்னும்‌ துன்பத்துள்‌ துன்பம்‌ கெடின்‌.
  • D ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்‌.

Question - 5

ஒப்புரவு என்பதன்‌ பொருள்‌ _________

  • A அடக்கமுடையது
  • B பண்புடையது
  • C ஊருக்கு உதவுவது
  • D செல்வமுடையது.

Question - 6

விரைந்து கெடுபவன்‌ யார்‌?

  • A பிறருடன்‌ ஒத்துப்போனவன்‌, தன்‌ வலிமை அறிந்தவன்‌, தன்னை உயர்வாக நினைப்பவன்‌,
  • B பிறருடன்‌ ஒத்துப்போகாதவன்‌, தன்‌ வலிமை அறியாதவன்‌, தன்னை உயர்வாக நினைக்காதவன்‌.
  • C பிறருடன்‌ ஒத்துப்போனவன்‌, தன்‌ வலிமை அறிந்தவன்‌, தன்னை உயர்வாக நினைக்காதவன்‌.
  • D பிறருடன்‌ ஒத்துப்போகாதவன்‌, தன்‌ வலிமை அறியாதவன்‌, தன்னை உயர்வாக நினைப்பவன்‌.

Question - 7

பற்று நீங்கியவனுக்கு உண்டாவது - பற்றற்றவனைப்‌ பற்றுவதால்‌ உண்டாவது.

  • A பற்றுகள்‌ பெருகும்‌ - பொருள்களின்‌ இன்பம்‌ பெருகும்‌.
  • B பற்றுகள்‌ அகலும்‌ - பொருள்களின்‌ துன்பம்‌ அகலும்‌.
  • C பொருள்களின்‌ துன்பம்‌ அகலும்‌ - பற்றுகள்‌ அகலும்‌.
  • D பொருள்களின்‌ இன்பம்‌ பெருகும்‌ - பற்றுகள்‌ பெருகும்‌.

Question - 8

உலகோரால்‌ திருக்குறள்‌ தமிழ்மாதின்‌ ________ எனப்‌ பாராட்டப்படுகிறது.

  • A உயிர்மூச்சு 
  • B இனிய உயிர்நிலை
  • C இரு கண்கள்
  • D தொல்காப்பியம்

Question - 9

திருக்குறள்‌ ________ என்னும்‌ தொகைநூலைச்‌ சார்ந்தது.

  • A மேற்கணக்கு நூல்கள்
  • B பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
  • C ஜம்பெருங்காப்பியங்கள்
  • D புறநானூறு

Question - 10

திருக்குறள்‌ ________ பெரும்‌ பிரிவுகளைக்‌ கொண்டது.

  • A 3
  • B 5
  • C 7
  • D 9