11th Standard - தமிழ் - கேடில் விழுச்செல்வம் - செய்யுள் - நற்றிணை

Buy 11 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

9 அடி சிற்றெல்லையும்‌ 12 அடி பேரெல்லையும்‌ கொண்ட நூல்‌ __________

  • A நற்றிணை 
  • B குறுந்தொகை 
  • C அகநானூறு 
  • D ஐங்குறுநூறு.

Question - 2

நற்றிணை ._________ நூல்களுள்‌ ஒன்று.

  • A பத்துப்பாட்டு 
  • B எட்டுத்தொகை 
  • C பதினெண்கீழ்க்கணக்கு 
  • D ஐம்பெருங்காப்பியம்‌

Question - 3

நமக்குப்‌ பாடமாய்‌ அமைந்துள்ள நற்றிணைப்பாடலைப்‌ பாடியவர்‌ _________

  • A ஔவையார்  
  • B கல்லாடனார்
  • C நச்செள்ளையார்
  • D போதனார்‌

Question - 4

நற்றிணையைத்‌ தொகுப்பித்தவன் ___________

  • A பன்னாடு தந்த பாண்டியன்‌ மாறன் வழுதி
  • B சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்
  • C செல்வக்கடுங்கோ வாழியாதன்‌
  • D உப்பூரிகுடிகிழார்‌ மகன்‌ உருத்திரசன்மர்‌

Question - 5

நற்றிணை கூறும்‌ 'தத்துற்று' என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ __________

  • A தாவி 
  • B ஒடி 
  • C பறந்து 
  • D வருந்தி

Question - 6

அறிவும்‌ ஒழுக்கழும்‌ யாண்டுணர்ந்தனள்‌ கொல்‌ - இவ்வடியில்‌ குறிப்பிடப்படுபவர்‌ ___________

  • A நற்றாய்‌ 
  • B செவிலித்தாய்‌ 
  • C தோழி 
  • D தலைவி

Question - 7

சிறுவிளையாட்டி - இவ்வாறு யார்‌ யாரைக்‌ குறிப்பிட்டார்‌?

  • A பெற்ற தாய்‌ தலைவியை
  • B செவிலித்தாய்‌ தலைவியை
  • C தோழி தலைவியை
  • D ஊரார்‌ தலைவியை

Question - 8

கொடுத்த தந்‌தை கொழுஞ்சோறு உள்ளாள்‌ - இத்தொடரில்‌ கொழுஞ்சோறு என்பதன்‌ பொருள்

  • A பலரோடு. உண்ணும்‌ பெருமையை
  • B வளமான உணவை 
  • C மதிய உணவினை
  • D தந்தையின்‌ செல்வ நிலையை

Question - 9

சிறுமதுகையளே - இத்தொடரில்‌ மதுகை என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ யாது?

  • A மனவலிமை 
  • B உடல்வலிமை 
  • C குடும்பப்பெருமை 
  • D தற்பெருமை

Question - 10

எட்டுத்தொகை நூல்களுள்‌ முதலாவதாக அமைந்த நால் __________

  • A குறுந்தொகை 
  • B நற்றிணை 
  • C பதிற்றுப்பத்து 
  • D பரிபாடல்‌