10th Std - தமிழ் - உயிரின் ஓசை - கேட்கிறதா என்குரல்!

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

  • A செய்தி 1 மட்டும் சரி
  • B செய்தி 1, 2 ஆகியன சரி
  • C செய்தி 3 மட்டும் சரி
  • D செய்தி 1, 3 ஆகியன சரி

Question - 2

பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க

கொண்டல் 1 மேற்கு
கோடை 2 தெற்கு
வாடை 3 கிழக்கு
தென்றல் 4 வடக்கு
  • A அ ஆ இ ஈ  1 2 3 4
  • B அ ஆ இ ஈ  3 1 4 2
  • C அ ஆ இ ஈ  4 3 2 1
  • D அ ஆ இ ஈ  3 4 1 2

Question - 3

கிழக்கு என்பதற்கு ________ என்னும் பெயருமுண்டு.

  • A குணக்கு
  • B குடக்கு
  • C தென்றல்
  • D வாடை

Question - 4

வாடைக்காற்று _________ என்றும் அழைக்கப்படுகிறது.

  • A தென்றல்காற்று
  • B பூங்காற்று
  • C சுழல் காற்று
  • D ஊதைக் காற்று

Question - 5

புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண் ___________

  • A ஓசோன் படலம்
  • B காற்று
  • C மழை
  • D நீர்

Question - 6

“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்று கூறும் இலக்கியம் _________

  • A மணிமேகலை
  • B சிலப்பதிகாரம்
  • C கம்பராமாயணம்
  • D சீவகசிந்தாமணி

Question - 7

உலகக் காற்றாலை மின்சார உற்பத்தியில் இந்தியா _______ இடம் பெற்றுள்ளது.

  • A இரண்டாம்
  • B நான்காம்
  • C ஐந்தாம்
  • D ஆறாம்

Question - 8

உலக காற்று நாள் __________ அன்று கொண்டாடப்படுகிறது.

  • A ஜுன் 15
  • B அக்டோபர் 5
  • C செப்டம்பர் 15
  • D நவம்பர் 5

Question - 9

'வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம்' என்று கூறியவர் __________ .

  • A பரணர்
  • B வெண்ணிக்குயத்தியார்
  • C ஒளவையார்
  • D கபிலர்

Question - 10

உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர் _____________

  • A கம்பர்
  • B தொல்காப்பியர்
  • C இளங்கோவடிகள்
  • D திருத்தக்கத்தேவர்