10th Std - தமிழ் - உயிரின் ஓசை - காற்றே வா!

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”
- பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

  • A உருவகம், எதுகை
  • B மோனை, எதுகை
  • C முரண், இயைபு
  • D உவமை, எதுகை 

Question - 2

“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா”, சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பெற்றவர் ____________

  • A பாரதிதாசன்
  • B பாரதியார்
  • C சுத்தானந்த பாரதியார்
  • D திரு.வி.க.

Question - 3

எட்டையபுர ஏந்தலாய் அறியப்பட்டவர் __________

  • A பாரதியார்
  • B பாரதிதாசன்
  • C சுரதா
  • D இராமலிங்கனார்

Question - 4

கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் ___________

  • A பாரதிதாசன்
  • B பாரதியார்
  • C திரு.வி.க
  • D யாருமில்லை

Question - 5

இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராய்ப் பணியாற்றியவர் _________

  • A பாரதியார்
  • B பாரதிதாசன்
  • C மறைமலையடிகள்
  • D கவிமணி

Question - 6

'பாட்டுக்கொரு புலவன்' எனப் பாராட்டப்பட்டவர் ___________

  • A பாரதிதாசன்
  • B கவிமணி
  • C பாரதியார்
  • D திரு.வி.க.

Question - 7

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை ___________

  • A மரபு கவிதை
  • B வசனகவிதை
  • C இரண்டுமே
  • D இரண்டும் இல்லை

Question - 8

காற்றே, வா
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன்வா
இலைகளின் மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
அ) மயலுறுத்து என்பதன் பொருள் _________

  • A விளங்கச் செய்
  • B மயங்கச் செய்
  • C அடங்கச்செய்
  • D சீராக

Question - 9

காற்றே, வா
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன்வா
இலைகளின் மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

ப்ராண ரஸம் - பொருள் தருக.

  • A உயிர்வளி
  • B கார்பன்-டை-ஆக்சைடு
  • C ஹைட்ரோ கார்பன்
  • D கந்தக-டை-ஆக்சைடு

Question - 10

காற்றே, வா
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன்வா
இலைகளின் மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

இ) மிகுந்த - இலக்கணக் குறிப்பு தருக.

  • A வினையெச்சம்
  • B முற்றெச்சம்
  • C பெயரெச்சம்
  • D வினைத்தொகை