10th Std - தமிழ் - உயிரின் ஓசை - முல்லைப்பாட்டு

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

'பாடு இமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

  • A கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
  • B கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
  • C கடல்நீர் கொந்தளித்தல்
  • D கடல்நீர் ஒலித்தல்

Question - 2

சுவல் என்பதன் பொருள் _______ .

  • A அவல்
  • B தோள்
  • C தலை
  • D கால்

Question - 3

கோடு என்ற சொல் தரும் பொருள் ________ .

  • A ஏடு
  • B பாடு
  • C மலை
  • D பூமி

Question - 4

முல்லைப்பாட்டு __________ நூல்களுள் ஒன்று.

  • A எட்டுத்தொகை
  • B பத்துப்பாட்டு
  • C பதினெண்கீழ் கணக்கு
  • D காப்பி

Question - 5

முல்லைப்பாட்டு பாடலைப் படைத்தவர் _________ .

  • A நப்பூதனார்
  • B அம்மூவனார்
  • C கபிலர்
  • D பரணர்

Question - 6

முல்லை நிலத்தின் உரிப்பொருள் _________ .

  • A ஊடல்
  • B புணர்தல்
  • C பிரிதல்
  • D காத்திருத்தல்

Question - 7

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாய்" என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்"
"சுவல்" என்பதன் பொருள் ______________ .

  • A உணவு
  • B தோள்
  • C விளைந்து
  • D நெற்று

Question - 8

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாய்" என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்"
விரிச்சு கேட்டல் என்பது _________ .

  • A நற்சொல் கேட்டல்
  • B கனவு கேட்டல்
  • C பொய்யுரை கேட்டல்
  • D நீதி கேட்டல்

Question - 9

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாய்" என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்"
 பாடலில் இடம்பெறும் அடி எதுகைகளை எழுதுக.

  • A சிறுதாம்பு, உறுதுயர்
  • B நன்னர், நன்மொழி
  • C இன்னே, என்போள்
  • D அலமரல், ஆய்மகன்

Question - 10

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாய்" என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்"
"கோவலர்" என்பதன் பொருள் ___________ .

  • A எயினர்
  • B உழவர்
  • C இடையர்
  • D பரதவர்