10th Std - தமிழ் - உயிரின் ஓசை - தொகைநிலைத் தொடர்கள்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

'பெரிய மீசை'  சிரித்தார் - அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?

  • A பண்புத்தொகை
  • B உவமைத்தொகை
  • C அன்மொழித்தொகை
  • D உம்மைத்தொகை

Question - 2

தொகைநிலைத்தொடர் ________ வகைப்படும்.

  • A ஆறு
  • B நான்கு
  • C எட்டு
  • D மூன்று

Question - 3

காலம் கரந்த பெயரெச்சமே _________ ஆகும்.

  • A பொருட் பெயர்
  • B வினைத் தொகை
  • C பண்புத் தொகை
  • D வேற்றுமைத் தொகை

Question - 4

'மை' என்னும் பண்பு விகுதியைப் பெற்று வருவது __________ .

  • A வினைத் தொகை
  • B பண்புத் தொகை
  • C உவமைத் தொகை
  • D வேற்றுமைத் தொகை

Question - 5

'தாய்சேய்' என்பதில் _____________ வந்துள்ளது.

  • A  உம்மைத் தொகை
  • B உவமைத் தொகை
  • C வேற்றுமைத் தொகை
  • D பண்புத் தொகை

Question - 6

தமிழ்த்தொண்டு என்னும் தொடர் ___________ .

  • A இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • B அன்மொழித் தொகை
  • C உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
  • D வேற்றுமைத்தொகை

Question - 7

சிவப்புச் சட்டை பேசினார் - அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?

  • A பண்புத்தொகை
  • B உவமைத்தொகை
  • C அன்மொழித்தொகை
  • D உம்மைத்தொகை

Question - 8

 எழுகதிர், முத்துப்பல் - இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே ________________

  • A வினைத்தொகை, பண்புத்தொகை
  • B உவமைத்தொகை, வினைத்தொகை
  • C உவமைத்தொகை, வினைத்தொகை
  • D வினைத்தொகை, உவமைத்தொகை

Question - 9

பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் ______________ எனப்படும்.

  • A தொகைநிலைத்தொடர்
  • B தொகாநிலைத்தொடர்
  • C வேற்றுமைத்தொடர்
  • D இவை எதுவுமில்லை

Question - 10

தொகைநிலைத்தொடர்_____________ வகைப்படும்.

  • A ஏழு
  • B ஆறு
  • C ஐந்து
  • D ஒன்பது