10th Std - தமிழ் - மணற்கேணி - வினா, விடை வகைகள், பொருள்கோள்

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

வினா _______ வகைப்படும்.

  • A ஐந்து
  • B ஆறு
  • C ஏழு
  • D எட்டு

Question - 2

ஆசிரியரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று மாணவர் கேட்டல் _____________ .

  • A அறிவினா
  • B ஐயவினா
  • C அறியாவினா
  • D கொளல் வினா

Question - 3

மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று ஆசிரியர் கேட்டல் __________ .

  • A அறியா வினா
  • B அறிவினா
  • C ஐயவினா
  • D கொளல் வினா

Question - 4

“இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுதல் __________ .

  • A ஏவல் வினா
  • B அறியாவினா
  • C அறிவினா
  • D ஐய வினா

Question - 5

‘வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?' என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் ____________ .

  • A ஏவல் வினா
  • B அறிவினா
  • C கொளல் வினா
  • D ஐய வினா

Question - 6

'என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?' என்று கொடுப்பதற்காக வினவுதல் _________ .

  • A கொளல் வினா
  • B ஏவல் வினா
  • C கொடை வினா
  • D ஐய வினா

Question - 7

'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?' என்று நூலகரிடம் வினவுதல் ________ .

  • A கொடை வினா
  • B கொளல் வினா
  • C அறியாவினா
  • D அறிவினா

Question - 8

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது ________ ஆகும்.

  • A ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  • B நிரல்நிறைப் பொருள்கோள்
  • C தாப்பிசைப் பொருள்கோள்
  • D கொண்டு கூட்டுப் பொருள்கோள்

Question - 9

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது _________ பொருள்கோளாகும்.

  • A ஆற்று நீர்ப்
  • B கொண்டு கூட்டுப்
  • C நிரல் நிறைப்
  • D தாப்பிசை

Question - 10

விடை எத்தனை வகைப்படும்?

  • A எட்டு
  • B ஆறு
  • C ஐந்து
  • D நான்கு