10th Std - தமிழ் - கூட்டாஞ்சோறு - விருந்து போற்றுதும்!

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

பின்வருவனவற்றுள் முறையான தொடர் ____________

  • A தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
  • B தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
  • C தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
  • D தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

Question - 2

விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது, புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை _______________

  • A நிலத்திற்கேற்ற விருந்து
  • B இன்மையிலும் விருந்து
  • C அல்லிலும் விருந்து
  • D உற்றாரின் விருந்து

Question - 3

"விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்று விருந்தைப் போற்றிப் பாடும் நூல் ________ .

  • A புறநானூறு
  • B கலிங்கத்துப்பரணி
  • C திருக்குறள்
  • D பொருநராற்றுப்படை

Question - 4

"மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" என்று கூறும் நூல் ____________ .

  • A கொன்றை வேந்தன்
  • B நற்றிணை
  • C சிறுபாணாற்றுப்படை
  • D புறநானூறு

Question - 5

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று விருந்தினரை வழியனுப்பியதைக் கூறும் நூல் ____________ .

  • A சிலப்பதிகாரம்
  • B பொருநராற்றுப்படை
  • C குறுந்தொகை
  • D பெரியபுராணம்

Question - 6

“அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர். இதனால் தான் உலகம் நிலைத்திருக்கிறது" என்று கூறும் நூல் __________ .

  • A மணிமேகலை
  • B கலித்தொகை
  • C பரிபாடல்
  • D புறநானூறு

Question - 7

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் ________ .

  • A அகநானூறு
  • B நற்றிணை
  • C ஐங்குறுநூறு
  • D பதிற்றுப்பத்து

Question - 8

விடுபட்ட உணவு வகைகளை வரிசைப்படுத்துக. 
பச்சரியைக் கொண்டு ______ செய்து பாசிப்பருப்பினை வறுத்து ____________ பிடித்து கேரட்டைத் துருவி நெய்யிட்டு _______ செய்து முடித்த அம்மா, இறுதியாக உருளைக்கிழங்கைச் சீவி _______ செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார்.

  • A பொங்கல்,உருண்டை,சீவல்,அல்வா
  • B சீவல்,உருண்டை,அல்வா,சீவல்
  • C பொங்கல்,உருண்டை,அல்வா,சீவல்
  • D உருண்டை,சீவல்,அல்வா,பொங்கல்

Question - 9

“காலின் ஏழடிப்பின் சென்று” என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி ___________ .

  • A விருந்தினரின் காலைத்தொட்டு வணங்கினர்.
  • B விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
  • C  எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.
  • D ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.

Question - 10

'விருந்தே புதுமை' என்று கூறும் நூல் ____________

  • A அகத்தியம்
  • B தொல்காப்பியம்
  • C நன்னூல்
  • D மாறனலங்காரம்