10th Std - தமிழ் - அன்பின் மொழி - அணி

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

செய்யுளுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவது ___________

  • A அணி
  • B யாப்பு
  • C எழுத்து
  • D கவிதை

Question - 2

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன்குறிப்பை ஏற்றிக்கூறுவது ____________

  • A தீவக அணி
  • B தற்குறிப்பேற்ற அணி
  • C நிரல்நிறை அணி
  • D தன்மையணி

Question - 3

தீவகம் என்னும் சொல்லுக்குப் பொருள் ___________

  • A அணி
  • B பணி
  • C விளக்கு
  • D விலங்கு

Question - 4

தீவக அணி எத்தனை வகைப்படும்?

  • A இரண்டு
  • B மூன்று
  • C நான்கு
  • D ஐந்து

Question - 5

செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒருசொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது ____________

  • A தீவக அணி 
  • B தற்குறிப்பேற்ற அணி
  • C நிரல் நிறையணி 
  • D தன்மையணி

Question - 6

சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப்பொருள் கொள்வது ____________

  • A தற்குறிப்பேற்ற அணி
  • B தீவக அணி
  • C நிரல்நிறை அணி
  • D தன்மையணி

Question - 7

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது ____________

  • A நிரல்நிறை அணி
  • B தன்மையணி
  • C தற்குறிப்பேற்ற அணி
  • D தீவக அணி

Question - 8

தன்மையணியின் வேறுபெயர் __________

  • A உயர்வு நவிற்சி அணி
  • B தன்மை நவிற்சி அணி
  • C தற்குறிப்பேற்ற அணி
  • D நிரல்நிறை அணி

Question - 9

தன்மையணியின் வகைகள் எத்தனை?

  • A நான்கு
  • B மூன்று
  • C இரண்டு
  • D ஐந்து

Question - 10

குணத்தன்மையணி எவ்வணியின் ஒருவகை?

  • A தற்குறிப்பேற்ற அணி
  • B நிரல்நிறை அணி
  • C தன்மையணி
  • D தீவக அணி