10th Std - தமிழ் - மணற்கேணி - மொழிபெயர்ப்புக் கல்வி

Buy 10 ஆம் வகுப்பு தமிழ் Practice test pack

Question - 1

“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி ____________

  • A சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
  • B காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
  • C பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
  • D சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

Question - 2

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது _________ .

  • A மொழியாக்கம்
  • B மொழிபெயர்ப்பு
  • C இலக்கியம்
  • D பரப்புரை

Question - 3

ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் _____________ இன்றியமையாததாகும்.

  • A உறவுகள்
  • B மனிதர்கள்
  • C மொழிபெயர்ப்பு
  • D இலக்கியம்

Question - 4

மொழி பெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் _____________ குறிப்பிட்டுள்ளார்.

  • A பெயரியலில்
  • B செய்யுளியலில்
  • C மரபியலில்
  • D தொல்லியலில்

Question - 5

_______ மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

  • A இத்தாலி
  • B பிரான்ஸ்
  • C ஜெர்மன்
  • D சீனா

Question - 6

தமிழுக்குரிய நூலாக இருந்த _________ உலக மொழிகளுக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால் தான்.

  • A சிலப்பதிகாரம்
  • B மணிமேகலை
  • C குறவஞ்சி
  • D திருக்குறள்

Question - 7

'வால்காவிலிருந்து கங்கை வரை' என்னும் நூலை எழுதியவர் __________ .

  • A கம்பர்
  • B ராகுல் சாங்கிருத்யாயன்
  • C பாரதியார்
  • D வாணிதாசன்

Question - 8

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று பாடியவர் __________ 

  • A பாரதியார்
  • B பாரதிதாசன்
  • C சுரதா
  • D கபிலர்

Question - 9

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்" - எனப் பாடியவர் ________

  • A பாரதிதாசன்
  • B பாரதியார்
  • C வாணிதாசன்
  • D வைரமுத்து

Question - 10

"காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி, பேசி மகிழ் நிலை வேண்டும்” எனக் கூறுபவர் ________

  • A பாரதியார்
  • B குலோத்துங்கன்
  • C வைரமுத்து
  • D மு.மேத்தா